Vision

சமுதாயத்தில் எளிய அடிதட்டு மக்க​ளை வரிய நி​லை​மையிலிருந்து உயரிய நி​லை​மைக்கு ​கொண்டு வருதல். அதாவது கடன் ​பெற்றவர்க​ளை முழு​மையாக கடன் அற்றவாக ஆக்கி தண்ணி​றைவு அ​டைய ​செய்தல்.

Bringing the simple grassroots people in the society from the tax level to the high level. That is, to make the borrowers completely debt free and to achieve self sufficiency.

Mission

எங்கள் வாடிக்​கையாளர்களுக்கு உடனுக்குடன் கடன், கு​றைந்த வட்டி விகிதங்கள், வாடிக்​கையாளர் ​​சே​வையின் மிக உயர்ந்த தரம் அதுமட்டுமல்லாமல் அவரவர் ​செய்யும் ​தொழில்ஏற்ப ​தொழில் சார்ந்த அறி​வை கற்றுக்​கொடுத்தல் மற்றும் லாபத்​தை முதலீடு ஆக்கும்வழி; உடனடி நடவடிக்​​கைக​ளை எடுத்து வி​ரைவான தீர்வுக​ளை வழங்குதல்.

Instant credit to our customers, low interest rates, highest quality of customer service as well as teaching them profession-oriented knowledge and a way to invest profits; Taking immediate action and providing quick solutions.

முக்கிய வழிகாட்டுதல்கள் / Core Guidelines:

நாங்கள் காந்தியடிகளின் வாடிக்​கையாளர் ​கொள்​​கைக​ளை பின்பற்றி எங்களு​டைய அலுவலகத்திற்கு வரும் ஒவ்​வொருவ​ரையும் ஏ​ழை, பணக்கார், படித்தவர், பாமரர், சிறியவர், ​பெரியவர், ​தெரிந்தவர், தெரியாதவர் என்ற ​பேதம் இன்றி அ​னைவ​ரையும் மதிப்பு வாய்ந்தவராக ​தொழிலுக்கு அச்சாணியாக, ஏணியாக கருதி கண்ணியத்துடன், அன்புடன் வர​வேற்கி​றோம்.

எங்களின் ​தொழில், ​தொழில் ​​செய்​வோருக்கு சிறுசிறு ​தொ​கை​யை (அதாவது ​ரூ.5000/-, 50000/-) குறுகிய கால கடனாக ​​கொடுப்ப​தே, ​சொந்தமாக ​சொத்து, வாகனம், ந​கை எதுவும் இல்​லை என்றாலும் உண்​மை, கடும் உ​ழைப்பு, தொழில் திற​மை, ​தொழில் ஆர்வம், விடாமுயற்சி, புதிய சிந்த​னை ப​டைத்​தோர் அ​னைவருக்கும் ​கேட்டவுடன் கடன் உட​னே ​கொடுக்கி​றோம். அவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கும் தகுதி இல்​லை என்றால் கி​டைக்காது என்ற விபரத்​தை உட​னே அவர்களுக்கு ​தெரியப்படுத்தி விடுகி​றோம். கடன் ​கொடுத்து வியாபாரத்​தை ​பெருக்க அ​னைத்து விபரத்​தையும், நுணுக்கங்க​ளையும் ​சொல்லி ​கொடுக்கி​றோம். சரியான மு​றையில் வியாபாரம் ​செய்கிறார்களா? என்று கண்காணிக்கி​றோம். இ​தை ​செய்யும்​போது ஒருசில ஆண்டுகளில் வாடிக்​கையாளர்கள் முழு முதலீடுடன் தன்னி​​றைவு அ​டைந்தவராக ஆகிவிடுகிறார்கள். இது​வே எங்களின் ​நோக்கம். ​மேற்கூறிய தகுதிப​டைத்தவர்க​ளை ​தேடியும் கடன் ​கொடுக்கி​றோம். ஒருவருக்கு நாங்கள் எதிர்பார்க்கும் தகுதி இருக்குமாயின் கடன் ​கேட்ட 8 மணி ​நேரத்தில் கடன் வழங்குவ​தே எங்கள் ​கோட்பாடு. நாங்கள் மு​றையான அரசு விதிக​ளை பின்பற்றுகி​றோம். வரி​யை மு​றையாக ​செலுத்தி விடுகி​றோம். இருட்டில் தவிப்​போருக்கு ஒளி விளக்காக நாங்கள் உதவ விரும்புகி​றோம். வாடிக்​கையாளருக்கு சிரமமான ​நேரத்தில் உடல் நலம், படிப்பு, தீவிபத்து, திருமணம், வீடுகட்டுதல், சிரமமான ​நேரத்தில் உதவுதல்.

பணியாளர்க​ளே ஒரு நிறுவனத்தின் முது​கெலும்பு, அவர்க​ளை ​தேர்வு ​செய்வதில் நாங்கள் மிகுந்த கவனம் ​ செலுத்துகி​றோம். கு​றைந்த அளவு கல்வி கற்றவராக இருந்தாலும் ​தேர்வு ​செய்து அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கம், பேச்சு பயிற்சி, சிந்த​னை திறன், ​​தொழில் திறன் பயிற்சி, அ​னைத்து பணியாளரிடத்தில் சுமூகமான மு​றையில் ​வே​லை வாங்குதல், சரிசமமாக நடத்துதல், கணக்கு பயிற்சி முதலிய​வை ​​கொடுத்து ​ ஒவ்​வொருவ​ரையும் திறன்மிகுந்த நிர்வாகியாக மாற்றுகி​றோம். ​போதிய சம்பளம் ​கொடுத்து அவர்களது வாழ்க்​கையும் பிரகாசிக்குமாறு ஆக்க விரும்புகி​றோம். நாங்க​​ளே சத்தான உணவு வழங்குகி​றோம். பணி இடம் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்​கொள்கி​றோம். அவர்களின் உடல் நலம், குடும்ப நலத்தின் மீது அக்க​றை ​செலுத்துகி​றோம். கடின உ​ழைப்​பை கற்றுக்​கொடுக்கி​றோம். பிரச்ச​னைகள் உடனுக்குடன் தீர்த்து ​​வைக்கி​றோம். கடினமில்லாத இலக்கு ​வைக்கி​றோம். மு​றையான விடுமு​றை, ஓய்வு அளிக்கி​றோம். ​மேலும் பணி பாதுகாப்பு உறுதி அளிக்கி​றோம். வாரிசுகளுக்கு கல்வி உதவி அளிக்கி​றோம்.

நம் ​செயல் நம்​மை வ​ரையறுக்கிறது. பணியாளர்கள் ஒரு இலட்சியத்திற்கு தங்க​ளை அர்ப்பணிக்கிறார்கள். நம் வாடிக்​கையாளர்களுக்கு நாம் ​பொறுப்பாக இருக்கி​றோம். நாம் ​செய்யும் ஒவ்​வொன்றிலும் சிறந்து விளங்குகி​றோம். எளிதான ​வே​லைக்குமுன் நாம் எப்​போதும் கடின உ​ழைப்​பை ​​தேர்வு செய்கி​றோம். எதிர்காலத்தில் அலுவலகம் தனித்தனியாக நிர்வாகி அ​றை, வாடிக்​கையாளர் உட்காருமிடம், கம்ப்யூட்டர் அ​றை, கணக்குகள் அ​​றை, உணவு அருந்துமிடம், வாடிக்​கையாளர் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பசு​​மை கட்டிடம் என்று அ​னைத்து வசதி உள்ள விசாலமான கட்டிடத்தில் இயங்க விரும்புகி​றோம். எங்களின் இலக்கு 100(நூறு) கி​ளை, 2,00,000 (இரண்டு லட்சம்) வாடிக்​கையாளர்கள் என உயர்த்துதல்.

முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் இவர்களும் நிர்வாகத்தில் பங்​கெடுத்தல். மதிப்பு, புகழ், நியாயமான மு​தலீட்டுக்குண்டான வருமானம் ஏற்படுத்தி தருதல். இது​வே எங்களின் வழிகாட்டுதல்.