History

கௌதம் பைனான்ஸ்

தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, கல்வார்பட்டி எனும் சிறிய கிராமத்தில் S.பெரியசாமி அவர்களின் மகனாக பிறந்த P.நல்லசாமி என்பவர், மனிதன் வாழ தொழில் அல்லது வியாபாரம் அல்லது வேலை என ஏதாவது செய்து இளம் வயதில் பணம் ஈட்ட வேண்டும் என்ற புதுமொழியை கொண்டு 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு 2 வருட வேலை தேடலுக்கு பிறகு 1982-ம் வருடம் கும்பகோணம் அருகில் உள்ள பந்தநல்லூரில் வட்டி கடையில் வசூல் செய்யும் வேலை கிடைத்தது. அதற்கு திரு. V.வீரப்பன் மற்றும் திரு.S.பெரியசாமி என இருவரும் முதலாளிகள். அவருக்கு கிடைத்த இந்த வேலையில் அவருடைய குடும்பத்தில் உள்ள சிரமமான சூழ்நிலையிலும் நேர்மையாகவும், விசுவாசமாகவும், துடிப்பாகவும், ஆர்வத்துடனும் வாரத்திற்கு 105 மணி நேரம் என 15 மாத காலம் கடினமாக உழைத்து வந்தார். அவருடைய இந்த ஆர்வத்தை பார்த்த முதலாளிகள் இருவரும் சேர்ந்து ஆரணியில் ஒரு வட்டி கடை ஆரம்பித்து கொடுத்தார்கள். அதில் தன்னுடைய சொந்த முதலீடு இருந்தால்தான் ஒருவர் பொறுப்பாகவும், அக்கறையுடனும் உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் முதலாளிகள் இருவரும் சேர்ந்து ரூ.20000/- த்தை கொடுத்து அதனுடன் இவருடைய சொந்த பணம் ரூ.4000/-த்தையும் சேர்த்து மொத்தம் ரூ.24000/- முதலீட்டுடன் ஒரு வட்டி கடை ஆரம்பிக்கப்பட்டது. இதில் வட்டி அதிகம், முறையான கணக்கு கிடையாது. இருந்தபோதிலும் ஓரளவு வளர்ச்சி கண்டவுடன் பொருள் இல்லாதவருக்கு பொருள் செய்தல் முதற்கடன் என்று ஆரம்பித்ததில் 7 வருடங்களில் அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்தது.

மக்களுக்கு பணத்தேவை அதிகம். ஆனால் யாரும் முறையாக கொடுக்கவில்லை. வசதி படைத்தவர்களே கூட கடன் கேட்டால் கடன் கொடுக்க ஒருசில நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அவர்களும் ஜாமீன் வேண்டும். பங்குதாரர்கள் ஒப்புதல் வேண்டும் என ஏதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கே அந்த சூழ்நிலை இருக்கும்பட்சத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு கடன் எங்கே கிடைக்கும்? ஓரளவு பணம் கிடைத்தால் அதோடு திருப்தி அடைந்து சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள் மத்தியில் அதை விரும்பாத P.நல்லசாமி என்பவர் நாம் ஏன் நல்ல அலுவலகத்துடன் முறையான கணக்கு வழக்குகளுடன் ஒருசில எளிய விதிமுறைகளுடன் அனைவரும் எளிதாக கடன் பெறும் வகையில் ஒரு சிறிய அலுவலகத்தை துவங்கக்கூடாது என எண்ணி மூன்று பங்குதாரர்களுடன் மற்றும் S.உதயகுமார் என்ற முதல் பணியாளருடன் 1991-ம் ஆண்டு 10x10 என்ற சிறிய அளவிலான அறையில் ரூ.6000/ முதலீட்டில் கௌதம் பைனான்ஸ் என்ற பெயரில் செய்யாறில் உள்ள பங்களா தெருவில் ஆரம்பிக்கப்பட்டது இந்நிறுவனம். முயற்சி திருவிணையாக்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க அவரது இந்த முயற்சியினால் பல சவால்களையும் பிரச்சனைகளையும் கடந்து விடாமுயற்சியுடன் உழைத்ததன் பலனாக இன்று 52 கிளைகளுடன் நன்கு இயங்கி வருகிறது இந்நிறுவனம். எந்த தொழிலில் நீ ஈடுபட்டிருந்தாலும் அதில் எந்த அளவிற்கு ஈடுபாடு காட்டுகிறாயோ அந்த அளவு வெற்றி பெறுவாய் என்றே உழைத்து நிறுவனத்தை நிறுவனர், பங்குதாரர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் போன்றோர் உயர்த்தி வருகிறார்கள்.

பங்குதாரர்கள்:

முதலீடு செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் சீரிய முயற்சியினால் நிறுவனத்தை வெற்றி பாதையில் செல்ல இன்று 13 பங்குதாரர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.

பணியாளர்கள் :

நிறுவனத்தை லாபகரமாக நடத்த நாம் ஒத்துழைத்தால் நமக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று நல்ல முறையில் கடமை தவறாமல் 500 பணியாளர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் :

ஒரு தொழிலுக்கு முதுகெலும்பே வாடிக்கையாளர்கள்தான். வாடிக்கையாளர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை. அவர்கள்தான் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். நிறுவனத்தில் கடன் பெற்று அவர்களும் பயனடைந்து முறையாக திரும்ப செலுத்தி வருவதால்தான் நிறுவனம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. பலருக்கு கடன் வழங்கி உதவுவதன் மூலம் தனக்கு அதிக ஆத்ம திருப்தி கிடைப்பதாக கூறுகிறார் P.நல்லசாமி. அடுத்த 2 வருடங்களில் 65 கிளைகள் இலக்கு என நிர்ணயித்து நிறுவனர் P.நல்லசாமி மற்றும் பங்குதாரர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் போன்ற அனைவரும் ஒருசேர திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.